Women's Ministry

தென்னிந்திய திருச்சபை 1947ஆம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று உருவாக்கப்பட்டது. தென்னிந்திய திருச்சபை பெண்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை, தலைமைத்துவத்தை, கிறிஸ்துவை மையமாகவும், தமிழர் பண்பாட்டை மையமாகவும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெண்கள் ஐக்கிய சங்கத்தை உருவாக்கியது.

சிறந்த கிறிஸ்தவ தலைவர்களை உருவாக்க வேண்டிய பணி பெண்கள் ஐக்கிய சங்கம் மட்டுமே குடும்ப வாழ்விலும், திருச்சபை வாழ்விலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலே உருவாக்கப்பட்டதுதான்.

தன்னையே உலகிற்கு தந்த இயேசுவின் வழியில் வாழ்ந்த மிஷினரிகள் மற்றும் திருச்சபை தலைவர்கள் செய்து முடித்த நற்கிரியைகளை தொடர்ந்து செய்வதற்கு இன்றைய உலகின் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தலைவர்களின் தூரதரிசனம் பெண்கள் ஐக்கிய சங்க பணிகளின் மூலம் தான் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பெண்கள் ஐக்கிய சங்கம் தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்டது. இதே நோக்கத்தோடு நம் திருமண்டலத்திலும் உருவாக்கப்பட்டதுதான் நமது திருமண்டல் பெண்கள் ஐக்கிய சங்கம் ஆகும்.

கோவை திருமண்டலம் உருவான 1950ஆம் வருடம் முதல் பெண்கள் ஐக்கிய சங்கம் இயங்க ஆரம்பித்தது. தலைவராக பேராயர் அம்மா திருமதி.கிரேஸ் அப்பாசாமி அவர்களும், கௌரவ பொது காரியதரிசியாக திரு.பிரீடா ப.வில்சன் அவர்களும், பொருளாராக கி.வ.ஆரோன் அம்மையாரும் பொறுப்பேற்று பணியை நிறைவாக செய்தனர்.

வாரந்தோறும் பெண்கள் ஒன்று கூடி ஜெபிக்கவும், திருச்சபையின் பெண்கள் ஒருவரையொருவர் நன்கு அறியவும், ஆவிக்குரிய வளர்ச்சியில் ஊக்கமளிக்கவும் இன்று வரை ஜெபத்தினாலும், சேவையிலும், சாட்சியிலும் கிறிஸ்தவ பெண்களை இணைக்க அழைக்கிறது.